கிரிக்கெட்டுலயே நேர்மையா இல்லாதவருக்கு காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவி!!

By karthikeyan VFirst Published Nov 30, 2018, 3:09 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், இந்திய அணிக்காக பல வெற்றிகளை குவித்து கொடுத்தவர். இந்திய அணியின் குறிப்பிடத்தகுந்த கேப்டன்களில் ஒருவர். 10 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீன், கேப்டன்சியில் மட்டுமல்லாமல் ஒரு வீரராகவும் சிறந்து விளங்கியவர். எனினும் சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்று, கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர் அசாருதீன். 

கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு அரசியலில் அடிவைத்த அசாருதீன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 2009ம் ஆண்டு வெற்றி பெற்ற எம்பி-யான அசாருதீன், 2014ம் ஆண்டு தோல்வியடைந்தார். 

டிசம்பர் 7ம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் தலைமையில் டி.ஜே.எஸ், கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. 

இந்நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக அசாருதீனும் துணை தலைவர்களாக வினோத் குமார் மற்றும் ஜாஃபர் ஜாவேத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8 பொதுச்செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கிரிக்கெட்டிலேயே நேர்மையாக இல்லாமல் சூதாட்டப் புகாரில் சிக்கிய அசாருதீனுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!