என்னை ஏன் தூக்கி போட்டாங்கனு கூட தெரியல!! கேதர் ஜாதவ் அதிருப்தி.. இதுதான் தம்பி காரணம்னு வாயை அடக்கிய தேர்வுக்குழு

By karthikeyan VFirst Published Oct 26, 2018, 10:32 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் தன்னை ஏன் சேர்க்கவில்லை என்ற காரணத்தை கூட தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று கேதர் ஜாதவ் வேதனை தெரிவித்திருந்தார். அவருக்கு கேள்விக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்துள்ளார். 
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் தன்னை ஏன் சேர்க்கவில்லை என்ற காரணத்தை கூட தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று கேதர் ஜாதவ் வேதனை தெரிவித்திருந்தார். அவருக்கு கேள்விக்கு தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்துள்ளார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து எஞ்சிய மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்த கேதர் ஜாதவ் சேர்க்கப்படவில்லை. ஆசிய கோப்பை தொடரின்போது காயமடைந்த கேதர் ஜாதவ் காயமடைந்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை. ஆனால் காயம் குணமடைந்து தியோதர் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்காக ஆடி 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார் கேதர் ஜாதவ். அவர் காயத்திலிருந்து குணமடைந்தும் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. 

இதனால் அதிருப்தியடைந்த கேதர் ஜாதவ், அனைத்துவிதமான உடற்தகுதியிலும் தேர்வாகிவிட்டேன். காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து உடற்தகுதியில் தேர்வாகியுள்ளேன். அதனால்தான் தியோதர் டிராபியில் ஆட தேசிய கிரிக்கெட் அகாடமி எனக்கு அனுமதியளித்தது. ஆனாலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. நான் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்ற காரணத்தை கூட என்னிடம் சொல்லவில்லை என்று கேதர் ஜாதவ் வேதனை தெரிவித்திருந்தார். 

தேர்வுக்குழுவுக்கும் வீரர்களுக்கும் இடையே தகவல் தொடர்பில் இடைவெளி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். தாங்கள் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்ற காரணத்தை தேர்வுக்குழு சொல்லவில்லை என்று குற்றம்சாட்டினர். ஆனால், அவர்களிடம் முறையான காரணம் சொல்லப்பட்டது என்று தேர்வுக்குழு தலைவர் தெரிவித்திருந்தார். 

அதன்பிறகு விஜய் ஹசாரே தொடரில் ஜார்கண்ட் அணிக்காக தோனி ஆடுவார் என்று அவரை கேட்காமலேயே தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். ஆனால் நல்ல ஃபார்மில் உள்ள ஜார்கண்ட் அணியில் இடையில் சேர்ந்து குழப்ப விரும்பவில்லை எனக்கூறி ஜார்கண்ட் அணியில் ஆடமறுத்தார் தோனி. அப்போதே தோனியிடம் கேட்காமல் எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறு ஏற்கனவே வீரர்களுக்கும் தேர்வுக்குழுவுக்கும் இடையே தகவல் தொடர்பில் இடைவெளி இருக்கும் விவகாரம் பூதாகரமாகி கொண்டிருக்கும் வேளையில், கேதர் ஜாதவும் அதே குற்றச்சாட்டை முன்வைத்தார். 

கேதர் ஜாதவ் குற்றம்சாட்டிய பிறகு விளக்கமளித்துள்ள தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், கேதர் ஜாதவ் உடற்தகுதி காரணமாகவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவில்லை. அவர் அணிக்கு திரும்பும்போதெல்லாம் காயம் காரணமாக வெளியேறுகிறார். ஆசிய கோப்பை தொடரிலும் காயத்தால் அவதிப்பட்டார். அதனால் அவரது உடற்தகுதியை பரிசோதிக்க போதுமான போட்டிகளில் அவர் ஆட வேண்டும். தியோதர் டிராபி தொடரில் அவரது உடற்தகுதியை பரிசோதிக்கலாம் என்று நினைத்தால், அவர் ஆடிய இந்தியா ஏ அணி தொடரை விட்டு வெளியேறிவிட்டது என்றார். 
 

click me!