ரோஹித்தை டீம்ல எடுங்க.. ஆனா ஓபனிங்ல இறக்காதீங்க!! அப்படினா தொடக்க ஜோடி எது..? சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 12, 2018, 12:29 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் கண்டிப்பாக ரோஹித் சர்மா ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள சேவாக், ஆனால் தொடக்க வீரராக இல்லை என்றும் அதிரடியை கிளப்பியுள்ளார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் கண்டிப்பாக ரோஹித் சர்மா ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள சேவாக், ஆனால் தொடக்க வீரராக இல்லை என்றும் அதிரடியை கிளப்பியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. 

எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸாகும் என்பதால் பவுன்ஸரை சிறப்பாக ஆடக்கூடிய ரோஹித் சர்மா, மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுகமான பிரித்வி ஷா, சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்துள்ளார். ராகுல் தொடர்ந்து சொதப்பிவந்தாலும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரோஹித்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்க ஜோடி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்பதை நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அவரது ஆட்டம்தான் தீர்மானிக்கும் நிலை உள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை விளாசிய ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கக்கூடாது. அவர் கண்டிப்பாக ஆடும் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும் ராகுலுமே களமிறக்கப்பட வேண்டும். தொடக்கத்திலேயே அட்டாக் செய்து ஆடி ரன்களை குவிக்கக்கூடிய ஜோடியாக திகழ்கிறது. எனவே அவர்களே தொடக்க வீரர்களாக களமிறங்கலாம். ஆனால் ரோஹித் சர்மா ஆடும் லெவனில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சேவாக் அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!