ரவி சாஸ்திரியை இதைவிட மோசமா யாராலும் அசிங்கப்படுத்த முடியாது!! கிழித்து தொங்கவிட்ட சேவாக்

By karthikeyan VFirst Published Sep 4, 2018, 3:20 PM IST
Highlights

தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என வாயில் கூறுவதை விடுத்து செயலில் காட்டுங்கள் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முன்னாள் வீரர் சேவாக் கடிந்துள்ளார்.
 

தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என வாயில் கூறுவதை விடுத்து செயலில் காட்டுங்கள் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முன்னாள் வீரர் சேவாக் கடிந்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று மீண்டெழுந்தது. ஆனால் அந்த வெற்றியை தொடர முடியாமல் நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்று தொடரை இழந்தது.

ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்தியாவிற்கு வெளியே இந்திய அணியின் ஆட்டம் பெரிதாக சொல்லும்படியாக இல்லை. தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இங்கிலாந்திலும் தொடரை இழந்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றபிறகு, கேப்டன் கோலி மீதும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதும், எங்களால் உலகின் எந்த அணியையும் அவர்களது இடத்தில் வைத்தே வீழ்த்த முடியும். அதேநேரத்தில் எந்த அணியும் இந்தியாவிற்கு வந்து எங்கள் அணியை வீழ்த்த முடியாது. நாங்கள் இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் சென்று வெற்றிகளை குவிக்க விரும்புகிறோம். எங்கள் அணி உலகின் மிகச்சிறந்த டிராவலிங் அணி(எதிரணியை அந்த நாட்டில் வைத்து வீழ்த்துவதை குறிப்பிடுகிறார்) என தெரிவித்திருந்தார். 

நான்காவது போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில், ரவி சாஸ்திரியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வீரேந்திர சேவாக். சாஸ்திரியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள சேவாக், பெஸ்ட் டிராவலிங் டீம் என்று வாயில் சொன்னால் போதாது. செயலில் காட்ட வேண்டும். யார் வேண்டுமானாலும் மனதில் நினைப்பதை பேசிவிட்டு போகலாம். ஆனால் சிறந்த அணி என்றால் அதை களத்தில் காட்ட வேண்டும். அதைவிடுத்து ஓய்வறையில் அமர்ந்துகொண்டு சிறந்த அணி என்று வாயில் மட்டுமே சொல்லி கொண்டிருக்க கூடாது. எனவே களத்தில் சிறப்பாக ஆடாமல் வாயில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால், என்றைக்குமே உலகின் சிறந்த அணியாக முடியாது என கடுமையாக விமர்சித்துள்ளார் சேவாக். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு அனில் கும்ப்ளேவை நியமிக்க வேண்டும் என்ற குரல்களும் பரவலாக எழுந்துள்ளன.
 

click me!