என்ன ஒரு அருமையான கேட்ச்!! பேசாம செக்யூரிடிக்கு ஒரு ஜெர்சியை கொடுத்து மைதானத்துக்கு அனுப்பலாம் போலவே..?

By karthikeyan VFirst Published Nov 12, 2018, 1:56 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் சிக்ஸருக்கு அனுப்பிய பந்தை செக்யூரிட்டி ஒருவர் லாவகமாக கேட்ச் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் சிக்ஸருக்கு அனுப்பிய பந்தை செக்யூரிட்டி ஒருவர் லாவகமாக கேட்ச் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என தென்னாப்பிரிக்க அணி வென்றுவிட்டது. இன்னும் ஒரே ஒரு டி20 போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. 

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் தொடக்கத்திலேயே சரிந்துவிட்டாலும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டுபிளெசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி அபாரமாக ஆடி ரன்களை குவித்தது. இருவரும் சிறப்பாக ஆடி சதமடித்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 252 ரன்களை குவித்தது. டுபிளெசிஸ் மற்றும் மில்லரின் சதத்தால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 320 ரன்களை குவித்தது. 

321 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் முதல் மூன்று விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு இழந்தது. ஃபின்ச், லின், டிராவிஸ் ஹெட் ஆகிய மூவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். எனினும் ஷான் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும் இந்த பார்ட்னர்ஷிப் நீடிக்கவில்லை. ஸ்டோய்னிஸ் 63 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடி சதமடித்த ஷான் மார்ஷ் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷான் மார்ஷ் ஆட்டமிழந்ததுமே ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை தகர்ந்துவிட்டது. எனினும் அலெக்ஸ் கேரியும் மேக்ஸ்வெல்லும் ஆஸ்திரேலிய அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்வார்களா என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணியால் 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, ஒருநாள் தொடரை 2-1 என வென்றது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸின்போது டுவைன் பிரிடோரியஸ் வீசிய 30வது ஓவரில் ஒரு பந்தை ஷான் மார்ஷ் சிக்ஸருக்கு அனுப்பினார். அதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டி ஒருவர் லாவகமாக கேட்ச் செய்தார். எனினும் கேட்ச் செய்தபிறகு பேலன்ஸ் செய்யமுடியாமல் கீழே விழுந்தார். ஆனால் பந்தை விடவில்லை. அவர் பிடித்த அருமையான கேட்ச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. செக்யூரிட்டியின் கேட்ச், கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

CLASSIC! The local fans were having all sorts of catching problems today, until old mate Frank stepped up to save the day! Outstanding. pic.twitter.com/fRUmsmyLfb

— cricket.com.au (@cricketcomau)

அந்த செக்யூரிட்டிக்கு பேட்டிங் ஆட தெரிந்தால், பேசாமல் அவருக்கு ஒரு ஜெர்சியை கொடுத்து மைதானத்திற்குள் அனுப்பலாம் என்றும் இன்னும் பலவாறும் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 
 

click me!