அறிவியல் பூர்வ ஆதாரம் ரெடி; டூட்டி சந்துக்கு எதிரான விசாரணையை மீண்டும் தொடர்வோம் - ஐஏஏஎஃப்.

Asianet News Tamil  
Published : Jul 05, 2017, 09:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
அறிவியல் பூர்வ ஆதாரம் ரெடி; டூட்டி சந்துக்கு எதிரான விசாரணையை மீண்டும் தொடர்வோம் - ஐஏஏஎஃப்.

சுருக்கம்

Scientific evidence Ready We will continue the trial against Dutti Chand- IAAF

இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்தின் பாலின விவகாரம் தொடர்பான அறிவியல் பூர்வ ஆதாரம் தயாராக உள்ளது எனவும், அவர் மீதான விசாரணையை மீண்டும் தொடர்வோம் எனவும் சர்வதேச தடகள சங்கங்களுக்கான சம்மேளனம் (ஐஏஏஎஃப்) அறிவித்துள்ளது.

இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் (21). இவரது உடலில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில், 'டெஸ்டோஸ்டெரோன்' என்ற ஆண்களுக்கான ஹார்மோன்கள் உற்பத்தியாவதாக பரிசோதனையில் தெரியவந்தது என்று இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) கூறியது.

அதன் விளைவாக கடந்த 2014-ஆம் ஆண்டில் அவரை தகுதி நீக்கம் செய்தும், ஐஏஏஎஃப்-ன் 'ஹைபர்ஆன்ட்ரோஜெனிசம்' கொள்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அறிவித்தது.

இதையடுத்து, தனது தகுதி நீக்க நடவடிக்கை மற்றும் ஐஏஏஎஃப்-ன் 'ஹைபர்ஆன்ட்ரோஜெனிசம்' கொள்கை ஆகியவற்றிற்கு எதிராக டூட்டி சந்த், 2014 செப்டம்பரில் விளையாட்டுக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் (சிஏஎஸ்) மேல்முறையீடு செய்தார். அவருக்கான மேல்முறையீட்டுச் செலவுகளை மத்திய அரசு ஏற்றது.

அந்த மனுவை 2015 ஜூலை 27-ஆம் தேதி விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், “'டெஸ்டோஸ்டெரோன்' அதிகளவு உற்பத்தியாவதால் இதர வீராங்கனைகளைக் காட்டிலும் டூட்டி சந்த் எந்த வகையில் லாபம் அடைகிறார் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை” எனக் கூறியது.

அத்துடன், அது தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரத்தை ஐஏஏஎஃப் சமர்ப்பிக்கவில்லை எனில், அதன் 'ஹைபர்ஆன்ட்ரோஜெனிசம்' கொள்கை செல்லாததாகிவிடும் என்று கூறியது. மேலும், அத்தகைய ஆதாரத்தை சமர்ப்பிக்க இரண்டு ஆண்டுகள் அவகாசமும் அளித்தது.

அதுவரையில் அந்தக் கொள்கைக்கு இடைக்காலத் தடையும் விதித்தும், மேலும், இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் டூட்டி சந்த் போட்டிகளில் பங்கேற்பதற்கும் அனுமதி அளித்தும் உத்தரவிட்டது சர்வதேச தீர்ப்பாயம்.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் அவகாசம் நிறைவடையவுள்ள நிலையில், அறிவியல் பூர்வ ஆதாரத்தை திரட்டியுள்ளதாகவும், டூட்டி சந்துக்கு எதிரான விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாகவும் ஐஏஏஎஃப் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஏஏஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ஐஏஏஎஃப் மற்றும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் 'டெஸ்டோஸ்டெரோன்' தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, 2011 மற்றும் 2013 ஐஏஏஎஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற தடகள வீரர் / வீராங்கனைகளில் 2 ஆயிரத்து 127 பேரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, 'டெஸ்டோஸ்டெரோன்' உற்பத்தி அதிகம் உள்ள தடகள வீராங்கனைகள், இதர வீராங்கனைகளைக் காட்டிலும் 1.8 சதவீதம் முதல் 4.5 சதவீதம் வரையில் பலன் அடைகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்தது” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு அறிக்கைகளை, சிஏஎஸ் விசாரணையின்போது தனது 'ஹைபர்ஆன்ட்ரோஜெனிசம்' கொள்கைக்கு சாதகமான ஆதாரமாக ஐஏஏஎஃப் சமர்ப்பிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav: பும்ராவையே மிரள வச்ச 15 வயசு பையன்! முதல் பந்திலேயே சிக்ஸர்... முன்னாள் வீரர் ஃபுல் மார்க்
Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!