இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றியைப் பதிவு செய்தது மே.தீவுகள்…

Asianet News Tamil  
Published : Jul 04, 2017, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றியைப் பதிவு செய்தது மே.தீவுகள்…

சுருக்கம்

west india register its First victory against India

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது மே.தீவுகள்.

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆன்டிகுவாவில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 190 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர் அஜிங்க்ய ரஹானே மட்டும் அதிகபட்சமாக 91 பந்துகளுக்கு 60 ஓட்டங்கள் எடுத்தார்.

அவருக்கு அடுத்தபடியாக தோனி 114 பந்துகளில் 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா 20 ஓட்டங்கள், ஜடேஜா 11 ஓட்டங்கள், கேதார் ஜாதவ் 10 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினர். கேப்டன் கோலி, தவன், தினேஷ் கார்த்திக், முகமது சமி ஒற்றை இலக்க ஓட்டங்களில் வீழ்ந்தனர். உமேஷ் யாதவ் டக் அவுட் ஆக, குல்தீப் யாதவ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அல்ஜாரி ஜோசஃப் 2 விக்கெட்டுகள், கெஸ்ரிக் வில்லியம்ஸ், தேவேந்திர பிஷு, ஆஷ்லே நர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஐந்து ஆட்டங்களைக் கொண்ட இந்த தொடரில் இந்தியா இரு வெற்றிகளைப் பெற்றுள்ளது என்பதும், ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

CSK vs DC: வேஸ்ட் லக்கேஜ்.. இளம் வீரர் நீக்கம்.. 'சிக்சர்' மன்னன் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
Vaibhav: பும்ராவையே மிரள வச்ச 15 வயசு பையன்! முதல் பந்திலேயே சிக்ஸர்... முன்னாள் வீரர் ஃபுல் மார்க்