
கடந்த 16 ஆம் தேதி முதல் டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2024 நடைபெற்றது. இதில், இன்று நடந்த ஆண்களுக்கு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சிராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியானது, தென் கொரியாவின் காங் மின் ஹியுக் மற்றும் சியோ செயுங் ஜே ஜோடியை எதிர்கொண்டது.
சாத்விக் சிராஜ் ஜோடியானது முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், 2ஆவது செட்டை 11-21 என்று இழந்தது. கடைசி செட்டை 21-18 என்று தென் கொரியா ஜோடி கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் மூலமாக சாத்விக் சிராஜ் ஜோடியானது 2ஆவது இடம் பிடித்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.