சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சாவின் திருமண வாழ்க்கையில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட்டரான சோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மாலிக் தனது முதல் மனைவி ஆயிஷா சித்திக்கை விவாகரத்து செய்து அதன் பிறகு மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில் தான் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். மேலும், சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலிக் உடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கினார். இதே போன்று, மாலிக்கும், சானியா மிர்சாவின் புகைப்படங்களை எல்லாம் நீக்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சானியா மிர்சா, திருமணம் கடினம், விவாகரத்து கடினம் என்று கடினமான வாழ்க்கை குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.
அவர் பதிவிட்டு ஓரிரு நாட்களுக்குள் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்கிராம் பக்கத்தில் பதிவிட்டு நியூ இன்னிங்ஸ் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் தான் மிர்சா குடும்பம் மற்றும் சானியா டீம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டனர்.
அதில், சானியா மிர்சா தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் பொது மக்கள் பார்வையிலிருந்து விலக்கியே வைத்துள்ளார். எனினும், சோயிப் மாலிக் விவாகரத்து பெற்று சில மாதங்களே ஆன நிலையில், அதனை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. சோயிப்பின் புதிய பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புகிறார். இதற்கு வாழ்த்துக்களும் கூறியிருக்கிறார். அவரது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் அனைத்து ரசிகர்களும், நலம் விரும்பிகளும் எந்தவிதமான ஊகங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தனி உரிமைக்கான அவரது தேவையை மதிக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தனர்.
சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா பிரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது சோயிப் மாலிக்கின் திருமணத்திற்கு மீறிய உறவு தான் காரணமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த உறவை கைவிடுமாறு சானியா மிர்சா எத்தனையோ முறை கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு எல்லாம், சோயிப் மாலிக் சரிப்பட்டு வரவில்லை. இதனால், சானியா மிர்சா நொந்து போனதாக சோயிப் மாலிக்கின் சகோதரியே கூறியிருக்கிறார். சானியா மிர்சாவை பிரிந்து சோயிப் மாலிக் மற்றொரு திருமணம் செய்து கொண்டதை ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.