சீனியர் வீரருக்கே ஆப்பு..? முன்னாள் வீரரின் அதிரடியால் கதிகலங்கிய அனுபவ வீரர்

By karthikeyan VFirst Published Oct 4, 2018, 3:31 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாராவை நீக்கிவிட்டு, வெளிநாட்டு தொடர்களை மனதில் கொண்டு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்து வலுவான பேட்டிங் ஆர்டரை உருவாக்க முயற்சிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாராவை நீக்கிவிட்டு, வெளிநாட்டு தொடர்களை மனதில் கொண்டு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்து வலுவான பேட்டிங் ஆர்டரை உருவாக்க முயற்சிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக இருந்த முரளி விஜய், தவான் ஆகியோர் தொடர்ந்து வெளிநாட்டு தொடர்களில் சொதப்பிவந்தனர். இதையடுத்து அவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. 

இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என இழந்தது. இந்த படுதோல்வியின் எதிரொலியாக இந்திய டெஸ்ட் அணியில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆட உள்ளது. 

எனவே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில் வைத்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணி தேர்வு நடைபெற்றது. அதனடிப்படையில், முரளி விஜய், தவான், ரோஹித் சர்மா ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா, மயன்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் பிரித்வி ஷா, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய பிரித்வி, 134 ரன்களுக்கு அவுட்டானார். நன்றாக ஆடிய புஜாரா 86 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. கோலியும் ரஹானேவும் களத்தில் உள்ளனர். 

இதற்கிடையே இந்திய அணி தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் தேர்வில் தேர்வுக்குழு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். சீனியர் வீரரான புஜாராவிற்கு பதிலாக பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வாலுடன் கூடுதலாக ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். உள்நாட்டு தொடர்களில் ரன்களை குவிக்கும் புஜாராவிற்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுப்பது, இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் வலுவாக திகழ்வதற்கு உதவிகரமாக அமையும் என சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!