தோல்விலாம் ஒரு மேட்டரா..? எதிரணியை மெர்சலாக்கும் பேட்டிங் பயிற்சியாளர்

First Published Jul 17, 2018, 2:31 PM IST
Highlights
sanjay bangar opinion about losing matches


தோல்வியை பொருட்டாக நினைக்காமல் அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம். அதைத்தான் இந்திய அணி எப்போதும் செய்து கொண்டிருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்காததுமே தோல்விக்கு முக்கிய காரணம்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது. அதனால் இன்று நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மிக முக்கியமானது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி. தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளதால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இந்நிலையில், போட்டிக்கு முன்னதாக பல கருத்துகளை பகிர்ந்து கொண்ட இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், தோல்விக்கு பிந்தைய இந்திய அணியின் மனநிலை குறித்தும் பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பாக பேசிய சஞ்சய் பங்கார், கடந்த ஓராண்டாக இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. நாங்கள் நினைப்பது போன்ற முடிவுகள் தான் கிடைத்து வருகின்றன. தோல்வியை பற்றி எப்போதுமே கவலைப்பட்டதுமில்லை, தோல்வியால் துவண்டதுமில்லை. இப்போதும் அதேபோன்றுதா. வீரர்கள் தோல்வியை பற்றி கவலை கொள்ளவில்லை. அடுத்த போட்டியில்தான் அவர்களின் கவனம் உள்ளது என சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். 

click me!