இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் பிரிந்து விட்டதாகவும், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் பிரிந்து விட்டதாகவும், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய டென்னிஸ் பிரபலமான சானியா மிர்சா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விளையாட்டுத்துறையில் மிகவும் பிரபலமானவர்கள். விளையாட்டுத்துறையில் இருந்து வந்து திருமணம் செய்து கொண்ட பிரபல ஜோடியும் கூட. இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சோயப் தனது முன்னாள் மனைவியான ஆயிஷா சித்திக்கை பிரிந்தார். இதன் பிறகே, சானியாவும் சோயப் மாலிக்கும் ஏப்ரல் 12, 2010 அன்று திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, அக்டோபர் 30, 2018 அன்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் மிர்சா மாலிக் என்று பெயரிட்டனர்.
சமூக ஊடகங்களில் இவர்களது பிரிவு குறித்த செய்தி வெளியாகும் வரை இவர்களுக்கு இடையே நல்ல உறவு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த நவம்பர் மாதம் தனது இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சா தனது மகனுக்கு உணவு ஊட்டுவதைப் போன்று ஒரு படத்தை பதிவு செய்து இருந்தார். அப்போது இருந்தே பிரிவு குறித்த சந்தேகங்களையும் ஊடகங்கள் எழுப்பி வந்தன. இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சாவின் மூக்கில் அவரது மகன் முத்தம் இட்டு அன்பை பறிமாறிக் கொள்வதைப் போன்று பதிவிட்டு இருந்தார். மேலும், ''இந்த தருணங்கள் என்னை மிகவும் கடினமான நாட்களுக்கு இழுத்துச் சென்றன'' என்று பதிவிடப்பட்டு இருந்தது.
மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவில், ''உடைந்த இதயங்கள் எங்கே செல்லும்'' என்று கேட்டு பதிவிட்டு இருந்தார். ஆனால், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தங்களது மகனின் பிறந்த நாளை இருவரும் சேர்ந்தே கொண்டாடி இருந்தனர். பிறந்த நாள் பதிவுகளையும் சோயிப் மாலிக் மட்டுமே பகிர்ந்து இருந்தார். ஆனால், சானியா மிர்சா தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிரவில்லை. இந்த நிலையில் வெளியாகி இருக்கும் இவர்களது பிரிவு குறித்த செய்தி தொடர்பாக இருதரப்பிலும் இருந்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.