புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸுக்கு தொடர் வெற்றிகள்.. புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேற்றம்

Published : Nov 06, 2022, 10:02 PM ISTUpdated : Nov 06, 2022, 10:06 PM IST
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸுக்கு தொடர் வெற்றிகள்.. புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேற்றம்

சுருக்கம்

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசனில் முதலிடத்தில் இருக்கும் புனேரி பல்தானை 35-34 என வீழ்த்தி புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிவந்த தமிழ் தலைவாஸ் அணி, தொடரின் பிற்பாதியில் வலுவான அணிகளை எல்லாம் தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றிகளை பெற்றுவருகிறது.

டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி, நேற்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது. இந்த சீசனில் அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள புனேரி பல்தானை இன்று எதிர்கொண்டது தமிழ் தலைவாஸ் அணி.இவரை மாதிரி ஒரு பேட்ஸ்மேனை இந்தியா பெற்றதில்லை.. நானும் பார்த்ததில்லை.! சூர்யகுமார் யாதவுக்கு கம்பீர் புகழாரம்

 

தமிழ் தலைவாஸ் - புனேரி பல்தான் இடையேயான போட்டி மிகக்கடும் போட்டியாக இருந்தது. இரு அணிகளும் அபாரமாக விளையாடின. இரு அணிகளும் சமமாக புள்ளிகளை பெற்றுவர, வெற்றிக்காக கடுமையாக போராடின. கடைசியில் 35-34 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றதன் விளைவாக, தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியது. 

இன்று நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸும் குஜராத் ஜெயிண்ட்ஸும் மோதின. இந்த போட்டியும் கடுமையான போட்டியாக இருந்தது. கடைசியில் 46-44 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் ஜெயிக்கணும்னா நீ இதை செய்தே தீரணும்! கேப்டன் பாபர் அசாமுக்கு அஃப்ரிடி எச்சரிக்கை

இன்றைய போட்டியில் தோல்விகளை தழுவியிருந்தாலும், புனேரி பல்தான் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 3ம் இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 4ம் இடத்திலும் உள்ளன.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?
ஹெய்டன் நிர்வாணமாக நடப்பதை தடுத்த ஜோ ரூட்..! கண்களை காப்பாற்றி விட்டதாக ஹெய்டன் மகள் நன்றி!