
சிந்து பயிற்சியாளரான பி.கோபிசந்திடம் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் மீண்டும் பயிற்சி பெற இருக்கிறார்.
கோபிசந்திடம் பயிற்சி பெற்று வந்த சாய்னா 2011-ஆம் ஆண்டில் தனது பயிற்சியாளரை மாற்றினார்.
பின்னர் சில மாதங்களிலேயே மீண்டும் கோபிசந்திடம் இணைந்த அவர், 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்.
2014-ஆம் ஆண்டு கோபிசந்திடம் இருந்து மீண்டும் விலகி, பெங்களூரில் விமல் குமாரிடம் பயிற்சி பெற்று வந்தார் சாய்னா.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில் சாய்னா நெவால் செய்தியாளர்களிடம் கூறியது:
“கோபிசந்திடம் மீண்டும் பயிற்சி பெறுவது தொடர்பாக அவரிடமும், எனது தற்போதைய பயிற்சியாளர் விமல் குமாரிடமும் கலந்து ஆலோசித்தேன்.
தற்போது கோபிசந்தின் அகாதெமியில் பயிற்சி பெறவுள்ளேன்” என்று சாய்னா கூறினார்.
இந்திய பாட்மிண்டன் அணியின் பயிற்சியாளரான கோபிசந்திடம், சிந்து பயிற்சி பெற்று வருகிறார் என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.