அஸ்தமனமாகும் சஹாவின் கிரிக்கெட் வாழ்க்கை..? ரசிகர்கள் அதிர்ச்சி

First Published Jul 22, 2018, 3:03 PM IST
Highlights
saha is in dead end in his cricket life


இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்துவந்த சஹா, தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. 

2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக சஹா செயல்பட்டு வந்தார். காயத்தால் இவர் ஆட முடியாத போட்டிகளில் பார்த்திவ் படேல் ஆடிவந்தார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சில கேட்ச் வாய்ப்புகளை பார்த்திவ் படேல் நழுவவிட்டது அணி தேர்வாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் ஐபிஎல்லில் காயமடைந்து சஹா ஆடமுடியாத சூழல் உருவானபோது, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அணியில் பார்த்திவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

ஏற்கனவே இந்திய அணியில் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவந்த பார்த்திவ் படேல் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துக்கொள்ளவில்லை. தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள சஹாவிற்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. 

அவருக்கு பதிலாக இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் சஹாவின் பேட்டிங், திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. பார்த்திவ் படேலின் விக்கெட் கீப்பிங் செயல்பாடும் சரியில்லை. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டுவிட்டால், டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திற்கான இடம் உறுதி செய்யப்பட்டுவிடும். 

ஏனெனில் சஹா தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு வர சில மாதங்கள் ஆகலாம். மேலும் சஹாவின் பேட்டிங்கில் அணி தேர்வாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் திருப்தி இல்லாத நிலையில், இங்கிலாந்து டெஸ்டில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சோபிக்கும் பட்சத்தில் அவருக்கான இடம் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் அவருக்கு மாற்றாக இருக்கும் மற்றொரு வீரர் ரிஷப் பண்ட் இளம் வீரர். டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாதவர். அது தினேஷ் கார்த்திற்கு சாதகமாக அமையலாம். ஆனால் அதை தினேஷ் கார்த்திக் பயன்படுத்திக் கொள்வதுதான் முக்கியம். 

தினேஷ் கார்த்திக்கிற்கு அடுத்தபடியாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் என விக்கெட் கீப்பர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். 

சஹா டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். ஒருநாள் போட்டிகளில் தோனிக்கு அடுத்து, தினேஷ் கார்த்திக் அல்லது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இனிமேல் அவருக்கு இடம்கிடைக்க வாய்ப்பில்லை. 

இப்படியான சூழலில், ஏற்கனவே சஹாவின் பேட்டிங்கில் தேர்வாளர்களுக்கு திருப்தி இல்லாத நிலையில், தற்போதைய தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டு வருவதற்குள் தினேஷ் கார்த்திக் தன்னை நிரூபித்துவிட்டால், சஹாவிற்கான இடம் சந்தேகம்தான்..

click me!