வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கொடுத்திருக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!

By Rsiva kumar  |  First Published Aug 9, 2024, 10:23 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் கூடுதல் உடல் எடை காரணமாக தகுதி நீக்கப்பட்டது செய்யப்பட்ட நிலையில் சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் முடிந்த நிலையில் இந்தியா 4 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 5 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 64ஆவது இடத்தில் உள்ளது. எனினும் இந்தியா துப்பாக்கி சுடுதல், பளூதூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் பதக்கத்தை இழந்தது. இதில் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், கூடுதல் உடல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மாதவிடாய் காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை இழந்தேன் – பளூதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு!

Tap to resize

Latest Videos

கூடுதல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில் தான் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக இறுதிப் போட்டிக்கு குஸ்மான் லோப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய அவர் தான் இறுதிப் போட்டியில் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சாரா அன் ஹில்டெப்ராண்ட் என்ற வீராங்கனையை எதிர்கொண்டார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 103 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம், 74 பதக்கங்களுடன் சீனா 2ஆவது இடம்!

இதில் சாரா ஹில்டெப்ராண்ட் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் கைப்பற்றினார். 2ஆவது இடம் பிடித்த லோப்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுசாகி யுய் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்சானா லிவாக்கை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து தான் ஓய்வு பெறுவதாக போகத் அறிவித்தார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஒலிம்பிக் சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கொடுத்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு விளையாட்டிற்கும் விதிகள் உண்டு. அந்த விதிகள் சூழல் காரணமாக மறுபரிசீலினை செய்யப்படலாம். வினேஷ் போகத் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டிக்கு முன்பு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்படி பார்த்தால் அவருக்கு வெள்ளிப் பதக்கத்திற்கு அவர் தகுதியானவர் தான். ஊக்க மருந்து பயன்பாடு காரணமாக ஒரு வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அது நியாயமானது. ஆனால், வினேஷ் போகத் அடுத்தடுத்து வெற்றி பெற்று டாப் 2 இடங்களை பிடித்ததால் வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர் தான். ஆதலால், அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

pic.twitter.com/LKL4mFlLQq

— Sachin Tendulkar (@sachin_rt)

 

click me!