அவங்க எல்லாரும் சுதாரிப்பதற்கு முன்.. இந்திய அணி இதை செஞ்சுடணும்!! என்ன சொல்கிறார் சச்சின்..?

First Published Feb 18, 2018, 2:34 PM IST
Highlights
sachin opinion about chahal and kuldeep


சாஹல் மற்றும் குல்தீப்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள சர்வதேச அணிகள் கற்றுக்கொள்வதற்குள் மேலும் பல வெற்றிகளை குவித்துவிட வேண்டும் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க சென்றுள்ள இந்திய அணி, 2-1 என டெஸ்ட் தொடரை இழந்தாலும் 5-1 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இந்த தொடரில் சாஹல், குல்தீப் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என இந்திய அணி அபாரமாக வென்றது. இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு பவுலிங் தான் மிக முக்கிய காரணம். சாஹலும் குல்தீப்பும் வருவதற்கு முன்னர், சிறந்த பேட்டிங் அணியாக இருந்த இந்திய அணி, தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது.

புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் வேகத்தில் மிரட்ட, சாஹலும் குல்தீப்பும் சுழலில் அசத்துகின்றனர். சாஹல் மற்றும் குல்தீப்பின் சுழலை ஆட முடியாமல் தென்னாப்பிரிக்க அணியினர் திணறினர். 5 போட்டிகளிலும் சாஹல், குல்தீப்பின் சுழலில் வீழ்ந்தனர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்.

6 போட்டிகளில் சாஹலும் குல்தீப்பும் மட்டுமே 33 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்கள் வழக்கமான ஸ்பின் பவுலர்களை விட மிகவும் மெதுவாக வீசுவதால், இவர்களது பவுலிங்கை எதிர்கொள்ள எதிரணியினர் திணறுகின்றனர்.

இந்நிலையில், சாஹல் மற்றும் குல்தீப்பின் பவுலிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், சாஹலும் குல்தீப்பும் நடுத்தர ஓவர்களில் மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். இவர்களின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என இதுவரை சர்வதேச அணிகள் கண்டறியவில்லை.

அதை கண்டுபிடித்து அதற்கான திட்டங்களை வகுப்பதற்கு முன் இவர்களை வைத்து இந்திய அணி மேலும் பல வெற்றிகளை பதிவுசெய்ய வேண்டும் என சச்சின் அறிவுறுத்தியுள்ளார். 
 

click me!