
இந்திய கேப்டன் விராட் கோலியின் பேட்டிங்கை புகழ வேண்டுமானால் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் புதிய வார்த்தையை தேட வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழ்ந்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என இந்திய அணி வென்றது. இந்த தொடரில் 3 சதங்கள், ஒரு அரைசதம் விளாசிய கேப்டன் விராட் கோலி தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றார்.
இந்த தொடரில் மூன்று சதங்கள், ஒரு அரைசதம் என 558 ரன்களை குவித்த கோலி பல சாதனைகளை புரிந்தார்.
கேப்டனாக அதிக சதங்கள், இருதரப்பு ஒருநாள் தொடரில் அதிக சதங்கள், இருதரப்பு ஒருநாள் தொடரில் அதிக ரன்கள், குறைந்த சர்வதேச போட்டியில் 17000 ரன்கள் என அடுக்கடுக்கான பல சாதனைகளை புரிந்தார் கோலி.
இந்நிலையில், கேப்டன் விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலை பற்றி பேச வார்த்தைகளே இல்லை. கோலியை புகழ வேண்டுமானால், ஆக்ஸ்ஃபோர்டு அகராதியை வாங்கி அதில் வார்த்தைகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி தான் என ரவி சாஸ்திரி புகழ்ந்து தள்ளினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.