விநோதமான விக்கெட்.. இதுவரை இந்த மாதிரி 3 பேர் மட்டும் தான் அவுட்டாகி இருக்காங்க

Asianet News Tamil  
Published : Feb 17, 2018, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
விநோதமான விக்கெட்.. இதுவரை இந்த மாதிரி 3 பேர் மட்டும் தான் அவுட்டாகி இருக்காங்க

சுருக்கம்

newzealand batsman rare hit wicket

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது.

இத்தொடரின் 5 போட்டியில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, மார்டின் கப்டிலின் அபார சதத்தால் 243 ரன்களை குவித்தது.

20 ஓவரில் 244 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அபாரமாக ஆடி 18.5 ஓவரிலேயே இலக்கை எட்டியது. சர்வதேச டி20 போட்டியில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இந்த போட்டியில், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது, 18வது ஓவரை பில்லி ஸ்டேன்லேக் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை நியூசிலாந்தின் மார்க் சேப்மேன் எதிர்கொண்டார். பவுன்சராக வந்த அந்த பந்து, சேப்மேனின் ஹெல்மெட்டில் அடித்து ஹெல்மெட் ஸ்டம்பில் விழுந்தது. இதனால் சேப்மேன் அவுட்டானார். 

இப்படியாக ஹிட் விக்கெட் முறையில் இதற்கு முன்னதாக நியூசிலாந்தில் ஆடம் பரோன் மற்றும் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் மட்டுமே அவுட்டாகியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சேப்மேனும் இணைந்துள்ளார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!