
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 558 ரன்களை குவித்துள்ளார் கோலி. நேற்று அடித்தது அவரது 35வது சதமாகும். சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் சச்சினுக்கு(49 சதங்கள்) அடுத்தபடியாக கோலி உள்ளார். பாண்டிங், ஜெயசூர்யா உள்ளிட்ட ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்த இடத்தை பிடித்துள்ளார் கோலி.
ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளையும் சதங்களையும் குவித்துவரும் கோலி, நேற்றைய போட்டியில் எட்டிய மைல்கல்களையும் சாதனைகளையும் பார்ப்போம்..
கடைசி போட்டியில் கோலியின் சாதனைகள்:
1. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். கோலி - 558 ரன்கள். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் - 491(ஆஸ்திரேலிய தொடர் - 2013-14)
2. இரு அணிகளுக்கு இடையேயான தொடரில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்( 3 சதங்கள்)
3. சர்வதேச போட்டிகளில் விரைவில் 17000 ரன்களை எட்டிய வீரர் - 363 போட்டிகளில் கோலி 17000 ரன்கள் அடித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.