நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலியா...

Asianet News Tamil  
Published : Feb 17, 2018, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலியா...

சுருக்கம்

Australia won the match against New Zealand

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றியை ருசித்தது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் ஆக்லாந்தில் நேற்று  நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் அடித்தது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்று பேட் செய்த நியூஸிலாந்தில் தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிகபட்சமாக 54 பந்துகளில் 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 105 ஓட்டங்கள் விளாசினார். உடன் வந்த காலின் மன்ரோ 33 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 76 ஓட்டங்கள் அடித்தார்.

எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ராஸ் டெய்லர் 17 ஓட்டங்கள் , பென் வீலர் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் கேன் ரிச்சர்ட்சன், ஆன்ட்ரு டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டான்லேக், ஆஷ்டோன் அகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர், ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஆர்சி ஷார்ட் அதிகபட்சமாக 44 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 76 ஓட்டங்கள் எடுத்தார். கேப்டன் டேவிட் வார்னர் 59 ஓட்டங்கள் , கிளென் மேக்ஸ்வெல் 31 ஓட்டங்கள் எடுத்தனர். ஆரோன் ஃபிஞ்ச் 36 ஓட்டங்கள் , அலெக்ஸ் கேரி 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினர்.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், டிம் செüதி, ஐஷ் சோதி, கிரான்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ஆர்சி ஷார்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்துள்ள 4-ஆவது தொடர் வெற்றியாகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

மின்னல் வேக அரைசதம்; வான்கடேவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட்மயர்!
ஜிம்பாப்வேயை நசுக்கிய WI.. 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. எகிறிய ரன் ரேட்.. இந்தியாவுக்கு நெருக்கடி!