அசத்தல் ஆட்டத்தால் எகிப்து அணியை வீழ்த்தி நாக் ஔட் சுற்றுக்கு முன்னேறியது ரஷியா...

First Published Jun 21, 2018, 3:38 PM IST
Highlights
russia defeated Egypt and enter into knock out round


உலக கோப்பை கால்பந்து போட்டியில் அசத்தால் ஆட்டத்தால் எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் ஔட் சுற்றுக்கு ரஷியா முன்னேறியது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஏ பிரிவில் ரஷியா மற்றும் எகிப்து அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளுக்கான ஆட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. 

இதன் தொடக்க ஆட்டத்தில் முதன்முறையாக ரஷியாவும் - எகிப்தும் மோதின. இதில், முகமது சலா களமிறங்கியும் எகிப்து அணியால் ரஷிய வீரர்களின் தாக்குதல் ஆட்டத்தை தடுக்க முடியவலில்லை. 

தொடக்கம் முதலே ரஷிய முன்கள வீரர்கள் எகிப்தின் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முயன்றனர். நட்சத்திர வீரர் சலா முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். 

ரஷிய வீரர்கள் அலெக்சாண்டர் கோலோவின், செரிஷேவ், ரோமன் ஸாபின் ஆகியோர் நீண்ட தூரத்தில் இருந்து கோலடிக்க முயன்று எகிப்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். 

இதன் விளைவாக முதல் பாதியில் எந்த அணியும் கோல்போடவில்லை. பின்னர் தொடங்கியிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் ரஷிய வீரர் ஸாபின் வலுவின்றி அடித்த பந்தைத் தடுக்க எகிப்து வீரர் அஹமது ஃபதி முயன்ற போது சேம்சேட் கோலானது. இதனால் 1-0 என ரஷியா முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து 59-வது நிமிடத்தில் ரஷிய வீரர் பெர்ணான்டஸ் அடித்த பந்தை நடுக்கள வீரர் டெனிஸ் செரிஷேவ் சரியாக பயன்படுத்தி கோலடித்தார்.  இது அவர் உலகக்கோப்பையில் போடும் 3-வது கோலாகும். 

அதனைத் தொடர்ந்து 62-வது நிமிடத்தில் மற்றொரு ரஷிய வீரர் குட்போவ் கடத்தித் தந்தை பந்தை முன்கள வீரர் அர்டெம் டையுபா அற்புதமாக கோலாக்கினார். இதனால் 3-0 என ரஷியா முன்னிலை பெற்றது. 

பின்னர், 73-வது நிமிடத்தில் ரஷிய வீரர் ஸிர்கோவ் எகிப்து வீரர் சலாவை தள்ளினார். ஆனால், நடுவர் பெனால்டி வாய்ப்பு தராமல் வெறும் பவுல் மட்டுமே வழங்கினார். 

இதையடுத்து விடியோ உதவி நடுவர் மூலம் சரிபார்க்கப்பட்டு எகிப்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது.  முகமது சலா சரியாக கோலடித்தார். இறுதியில் ரஷியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்று நாக் ஔட் சுற்றுக்கு முன்னேறியது.
 

tags
click me!