விராட் அங்கே சிரிக்கிறது எனக்கு கேட்குது!! கலகலத்த ரோஹித்

By karthikeyan VFirst Published Oct 30, 2018, 1:54 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி முடிந்ததும் பேசிய ரோஹித், ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது கோலி சிரிப்பது எனக்கு கேட்கிறது என்று கூறி கலகலத்தார். 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி முடிந்ததும் பேசிய ரோஹித், ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது கோலி சிரிப்பது எனக்கு கேட்கிறது என்று கூறி கலகலத்தார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து 162 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் அசத்தினார். முதல் ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்வது என்பது சாதாரண காரியமல்ல. எப்போது வேண்டுமானாலும் கேட்ச் வரும். அதனால் முழு கவனத்துடன் ஃபீல்டிங் செய்ய வேண்டும். அப்படி முதல் ஸ்லிப்பில் நின்று மூன்று கேட்ச்களை அருமையாக பிடித்து அசத்தினார் ரோஹித்.

சாமுவேல்ஸ், ஃபேபியன் அலென் மற்றும் ஆஷ்லி நர்ஸ் ஆகிய மூவரின் கேட்ச்சையும் பிடித்தார் ரோஹித். நேற்றைய போட்டி முடிந்ததும் ரோஹித்தை நேர்காணல் செய்த சஞ்சய் மஞ்சரேக்கர், ரோஹித் பிடித்த கேட்ச்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய ரோஹித் சர்மா, அண்மைக்காலமாக ஸ்லிப்பில் நின்று பல கேட்ச்களை பிடித்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறிக்கொண்டே விராட் சிரிப்பது எனக்கு கேட்கிறது என்று கலகலத்தார். ரோஹித் கேட்ச்சை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது கோலி சிரித்துக்கொண்டிருந்தார். அதைத்தான் ரோஹித் குறிப்பிட்டார். 

மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித், சில கேட்ச்களை பிடித்தது சிறப்பானது. ஸ்லிப்பில் நிற்கும்போது எந்த நேரத்திலும் கேட்ச் வரும். அந்த கேட்ச்களை பிடிப்பது முக்கியம். அதுவும் குல்தீப்பின் பந்துவீசும் போது ஸ்லிப்பில் நிற்பது கடினம். ஏனென்றால் அவர் என்ன மாதிரியான பந்து வீசப்போகிறார், எப்போது கூக்ளி வீசுவார் என்று கணிப்பது கடினம். ஆனால் வலைப்பயிற்சியில் அவரது பந்துகளை ஆடியதால், ஓரளவிற்கு அவரது பவுலிங்கை கணிப்பது எனக்கு எளிதாக இருந்தது என்று ரோஹித் தெரிவித்தார். 

click me!