ஐபிஎல்லயே பல தடவை பார்த்துட்டேன்.. இதெல்லாம் ஒரு மேட்டரா..? கெத்து காட்டிய ரோஹித்

By karthikeyan VFirst Published Nov 12, 2018, 3:51 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில், கடைசி நேரத்தில் மனீஷ் பாண்டேவின் சொதப்பலால் போட்டி கடைசி பந்துவரை சென்றது. 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில், கடைசி நேரத்தில் மனீஷ் பாண்டேவின் சொதப்பலால் போட்டி கடைசி பந்துவரை சென்றது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ். 

இலக்கை விரட்டிய இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தவானும் ரிஷப் பண்ட்டும் சிறப்பாக ஆடிய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இருவரும் அடித்து ஆடி ஆதிக்கம் செலுத்தினர். போட்டி இந்திய அணியின் பக்கமே இருந்தது. 19வது ஓவரில் விழுந்த ரிஷப் பண்ட்டின் விக்கெட் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த ஓவரின் எஞ்சிய 4 பந்துகளில் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்து மனீஷ் பாண்டே சொதப்பினார். 

இதையடுத்து கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ரன் எடுக்காமல், ஐந்தாவது பந்தில் தவான் ஆட்டமிழந்ததால் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலை ஏற்பட்டது. கடைசி பந்தில் தட்டுத்தடுமாறி இந்திய அணி ஒரு ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி, கடைசி நேரத்தில் பரபரப்பானது. 

போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் போட்டியின் கடைசி நேர பரபரப்பு பற்றி கேட்கப்பட்டது. அதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, இதுபோன்று நடப்பது இயல்புதான். ஏராளமான போட்டிகள் இதுபோன்று முடிந்துள்ளன. குறிப்பாக ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ்(ரோஹித் கேப்டனாக உள்ள அணி) அணி நிறைய போட்டிகளில் இவ்வாறு கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இவையெல்லாம் ஐபிஎல்லிலேயே நிறையா பார்த்தாச்சு என ரோஹித் தெரிவித்தார். 
 

click me!