அவுட் சொன்ன அம்பயரை ஒரு காட்டு காட்டிய காம்பீர்!! வீடியோ

By karthikeyan VFirst Published Nov 12, 2018, 2:39 PM IST
Highlights

ரஞ்சி டிராபி தொடரில் இமாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் தனக்கு அவுட் கொடுத்த அம்பயரை ஒரு காட்டு காட்டிவிட்டுத்தான் சென்றார் காம்பீர். 
 

ரஞ்சி டிராபி தொடரில் இமாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் தனக்கு அவுட் கொடுத்த அம்பயரை ஒரு காட்டு காட்டிவிட்டுத்தான் சென்றார் காம்பீர். 

ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்காக ஆடிவருகிறார் காம்பீர். டெல்லி மற்றும் இமாச்சல் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கவுதம் காம்பீர் மற்றும் ஹிதேன் தலால் ஆகியோர் களமிறங்கினர். ஹிதேன் இந்த போட்டியில்தான் அறிமுகமாகிறார். இருவரும் சிறப்பாக ஆடி 16 ஓவருக்கு 96 ரன்களை குவித்தனர். 

17வது ஓவரை வீசிய இமாச்சல் அணியின் இடது கை ஸ்பின்னர் மயன்க் தாகர், அந்த ஓவரின் முதல் பந்தில் காம்பீரை வீழ்த்தினார். இடது கை பேட்ஸ்மேனான காம்பீருக்கு இடது கை ஆஃப் ஸ்பின்னரான தாகர் வீசிய பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி நன்றாக திரும்பி, காம்பீரின் கால்காப்பில் அடித்து தவ்வியது. அதை ஷார்ட் லெக் திசையில் நின்ற ஃபீல்டர் கேட்ச்  செய்தார். இதற்கு அம்பயர் அவுட் கொடுத்தார். அம்பயரின் முடிவால் அதிருப்தியடைந்த காம்பீர், அம்பயரை நோக்கி ஆக்ரோஷமாக திட்டியவாறே சென்றார். 

pic.twitter.com/k9yuK2sREy

— Mushfiqur Fan (@NaaginDance)

பந்து பேட்டில் படவில்லை ஆதலால் கேட்ச்சாக இருக்க முடியாது. அதேநேரத்தில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே செல்ல வாய்ப்பு உள்ளதால் எல்பிடபிள்யூவும் கிடையாது என்பதால் காம்பீர் கோபமடைந்திருக்கலாம். எனினும் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி, உள்ளூர் போட்டியாக இருந்தாலும் சரி, அம்பயரின் தீர்ப்பை எதிர்த்து அவருடன் வாக்குவாதம் செய்வதோ அம்பயரை திட்டுவதோ கூடாது. எனினும் எப்போதுமே களத்தில் ஆக்ரோஷமான காம்பீர், இன்றும் அதே ஆக்ரோஷத்துடன் செயல்பட்டார். 
 

click me!