தென்னாப்பிரிக்கா பவுலிங்கில் “மாஸ்”னா.. இந்தியா பேட்டிங்கில் மாஸ்!! - ரோஹித் சர்மா

First Published Jan 4, 2018, 5:14 PM IST
Highlights
rohit sharma opinion about south africa bowling and tour


தற்போதைய நிலையில், தென்னாப்பிரிக்க அணி பவுலர்கள்தான் உலகின் சிறந்த பவுலர்கள் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியைத் தவிர கடந்த ஆண்டின் அனைத்து தொடர்களையும் வென்றுள்ள இந்திய அணி, வலுவான ஃபார்மில் உள்ளது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மீண்டும் இலங்கை என அடுத்தடுத்த தொடர்களை வென்று இந்திய அணி வலுவாகவும் உற்சாகமாகவும் உள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. 

இதுவரை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதே கிடையாது. ஆனால், கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க மண்ணில் வென்று வரலாற்று சாதனை படைக்கும் என டிராவிட் உள்ளிட்ட சில முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணிக்கு, வேகப்பந்து வீச்சிற்கு ஒத்துழைக்கும் அந்த நாட்டின் மைதானங்கள் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதேநேரத்தில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்திய அணி, எந்தவிதமான சவாலான பவுலிங்கையும் எதிர்கொள்ளும் திறன்கொண்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள அதிரடி நாயகன் ரோஹித் சர்மா, தற்போது உலக அளவில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி தென்னாப்பிரிக்கா தான். மோர்னே மோர்கல், ரபாடா ஆகியோர் வேகத்தில் மிரட்டுவார்கள். பழைய மற்றும் புதிய பந்துகளை கையாளுவதில் ஸ்டெயின் வல்லவர். உள்ளூர் போட்டிகளை பொறுத்தமட்டில் பிளாண்டர் மிகவும் சவாலானவர். இவ்வாறு என்னதான் தென்னாப்பிரிக்கா பவுலிங்கில் மாஸ் என்றாலும் இந்திய அணியும் பேட்டிங்கில் மாஸ் என்பதால் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
 

click me!