தந்தையை சந்திக்க இலங்கை ரசிகருக்கு உதவிய ரோகித் சர்மா! போன் போட்டு நலம் விசாரித்த விராத் கோலி...

First Published Dec 14, 2017, 5:10 PM IST
Highlights
Rohit Sharma Funds Ticket For Sri Lanka Fan To Go Home For Father Surgery


உடல் நலம் குன்றிய தந்தையைச் சந்திக்க இலங்கை ரசிகர் ஒருவருக்கு, விமானடிக்கெட் எடுத்துக் கொடுத்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மாஉதவியுள்ளார். ரோகித்தின் செயலுக்கு அந்தரசிகர் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவர் முகம்மது நீலம். இவர் இலங்கையைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர். இந்திய அணி எங்கு விளையாடினாலும், அங்கு சென்று முகம்மது நீலம் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், இலங்கை அணி இந்தியாவுக்கு வந்து டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. இதற்காக நீலம் இந்தியா வந்துள்ளார். டி20 போட்டிகள் வரை தங்கி இருக்கவும் ஏற்பாடுகள் செய்துவிட்டார். ஆனால், இலங்கை திரும்பிச் செல்ல நீலம் விமான டிக்கெட் எடுக்கவில்லை. 

இந்நிலையில், டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் கடைசி டெஸ்ட்போட்டி நடந்தது. அப்போது முகம்மது நீலம் இந்திய அணியின் ஆட்டத்தை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார். அப்போது, முகம்மது நீலமின் தந்தை ஏ.ஏ.பரூக் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதாக உடனடியாக இலங்கைக்கு புறப்பட்டு வரவும் என அவரின் குடும்பத்தாரிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், முகம்மது நீலம், இலங்கை செல்ல விமான டிக்கெட் உடனடியாக கிடைக்கவில்லை. இதையடுத்து, ரோகித் சர்மாவைச் சந்தித்து, தனது நிலையை தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரோகித் சர்மா, தனது உதவியாளர் மூலம், உடனடியாக முகம்மது நீலம் விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து, அவர் இலங்கை செல்ல உதவியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முகம்மது நீலம் நிருபர்களிடம் கூறுகையில், “ 
உடல்நலம் பாதிக்கப்பட்ட என் தந்தையை சரியான நேரத்துக்கு சந்திக்க உதவிய ரோகித் சர்மாவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மிகவும் இளகிய மனம் படைத்த ரோகித், பழகுவதற்கு இனிமையானவர். 2-வது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய ரோகித் சர்மாவை மொபைல் போனில் அழைத்து வாழ்த்தினேன்.

என் தந்தையின் உடல் குறித்து கேள்விப்பட்டு இத்தாலியில் இருக்கும் கேப்டன்விராத் கோலியும் மொபைலின் என்னை அழைத்து விவரம் கேட்டார். ஏதாவது உதவி தேவை என்றால், தயங்காமல் கேளுங்கள் என்றும் விராத் கோலி உறுதியளித்தார்.’’ எனத் தெரிவித்தார்.

click me!