
3 ஆண்டுகள் கழித்து ஒரு டுவீட்டை தோனி லைக் செய்துள்ளார். தோனி லைக் செய்த டுவீட்டால் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது டுவிட்டர் கணக்கைத் தொடங்கினார். டுவிட்டர் கணக்கைத் தொடங்கிய 8 ஆண்டுகளில் 68 லட்சம் பேர் தோனியை பின் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், தோனி இதுவரை வெறும் 45 டுவீட்டுகளை மட்டுமே தோனி பதிவிட்டுள்ளார். மேலும், இதுவரை வெறும் மூன்று முறை மட்டுமே மற்ற ட்வீட்களை அவர் லைக் செய்துள்ளார்.
முதன்முறையாக கடந்த 2013ம் ஆண்டு, பத்திரிகையாளர் ராஜ்தீப் சரேதேசாயின் டுவீட்டினை லைக் செய்தார். அதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஹைதராபாத்-சர்வீஸ் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை குறித்த பிசிசிஐ பதிவிட்ட டுவீட்டை இரண்டாவது முறையாக தோனி லைக் செய்தார்.
அதன்பிறகு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஒரு டுவீட்டை தோனி லைக் செய்துள்ளார். இதையடுத்து பெரும் சர்ச்சையே வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தி செய்தித்தளத்தின் டுவிட்டர் பக்கத்தில், கோலி தலைமையிலான இந்திய அணி, 2019 உலகக்கோப்பையை வெல்லும். மேட்ச் பிக்சிங் செய்யப்பட்டுவிட்டது என ஒரு டுவீட் பதிவிடப்பட்டுள்ளது. இந்த டுவீட்டை வழிமொழிவது போல தோனி லைக் செய்துள்ளார்.
இதையடுத்து பெரும் சர்ச்சையே வெடித்துள்ளது. மேட்ச் பிக்ஸிங் என போடப்பட்ட டுவிட்டர் பதிவுக்கு தோனி லைக் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.