ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் 3-வது ஆஷஸ் போட்டி இன்று; மிஸ் பண்ணிடாதீங்க...

 
Published : Dec 14, 2017, 10:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் 3-வது ஆஷஸ் போட்டி இன்று; மிஸ் பண்ணிடாதீங்க...

சுருக்கம்

Australia - England crash 3rd Ashes match today

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றிப் பெற்றது.

இதன்பின்னர், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதிலும் வெற்றிப் பெறும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

அதுபோல, அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்றால் தான் தொடரைத் தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து களமிறங்குகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள பதினோறு பேர் கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி விவரம்

ஆஸ்திரேலியா:

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பென்க்ராஃப்ட், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜாஷ் ஹாசில்வுட், நாதன் லயன்.

இங்கிலாந்து:

ஜோ ரூட் (கேப்டன்), அலஸ்டைர் கூக், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் மாலான், மூயின் அலி, ஜானி பேய்ர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கிரேய்க் ஓவர்டன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!