
ஒருநாள் போட்டியில் அதிகமுறை 150 ரன்களுக்கு மேல் அடித்தவர்களில் சச்சினும் ரோஹித்தும் சம அளவில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 3 போட்டிகளில் 2ல் கோலி சதமடித்தார். அதுவும் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் 160 ரன்களை குவித்தார் கோலி.
இந்த வேளையில், இந்திய அணியில் அதிகமுறை 150 ரன்களை கடந்த வீரர்களை தெரிந்துகொள்வோம்.
1. சச்சின் டெண்டுல்கர்
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
2. ரோஹித் சர்மா
ஹிட் மேன் என அழைக்கப்படும் ரோஹித் சர்மாவும் 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதில் மூன்று இரட்டை சதங்களும் அடக்கம்.
3. விராட் கோலி
இந்த வரிசையில் மூன்றாவது இடம் வகிப்பவர் கேப்டன் விராட் கோலி. நேற்று அடித்ததுடன் சேர்த்து மூன்று முறை 150 ரன்களை கடந்துள்ளார் கோலி.
4. கங்குலி
முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இருமுறை 150 ரன்களை கடந்துள்ளார்.
5. வீரேந்திர சேவாக்
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான வீரேந்திர சேவாக்கும் 2 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
6. கௌதம் காம்பீர்
முன்னாள் தொடக்க வீரர் கௌதம் காம்பீர். இந்திய அணியின் வெற்றிக்கு பல நேரங்களில் தனது அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ள கௌதம் காம்பீரும் 2 முறை 150 ரன்களை கடந்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் இருப்பது சச்சின்னும் ரோஹித்தும். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களை குவித்த சச்சின் டெண்டுல்கரே 5 முறைதான் 150 ரன்களை கடந்துள்ளார்.
ஆனால் வெறும் 173 போட்டிகளில் விளையாடி 16 சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, 5 முறை 150 ரன்களை கடந்து, சச்சினுடன் இந்த பெருமையை பகிர்ந்துகொள்கிறார். ரோஹித் இன்னும் நீண்ட காலம் விளையாடுவார் என்பதால், சச்சினை முந்தி விரைவில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
இந்த பட்டியலின் மூலம் ரோஹித்தால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியும் என்பது தெளிவாக புலனாகிறது. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சோபிக்க முடியாமல் திணறிவருகிறார் ரோஹித். விரைவில் மீண்டெழுந்து தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிடுவார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.