இந்திய அணியின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக திகழ்ந்துவரும் தோனி, தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருந்துவரும் நிலையில், அவரது இடத்தை பிடித்துள்ளார் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
இந்திய அணியின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக திகழ்ந்துவரும் தோனி, தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருந்துவரும் நிலையில், அவரது இடத்தை பிடித்துள்ளார் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட், கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக இல்லாவிட்டாலும் கூட பேட்ஸ்மேனாக இடத்தை பிடித்துவிட்டார். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருக்கும் சிக்கல், ரிஷப் பண்ட்டிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஒருநாள் அணியில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுவதால், மிடில் ஆர்டர் பிரச்னைக்கான தீர்வாக வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் ரிஷப் பண்ட்.
அதுமட்டுமல்லாமல் டி20 அணியிலும் தோனியின் இடத்தை பிடித்துவிட்டார் ரிஷப் பண்ட். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். எனவே தோனியின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை 99% முடிவுக்கு வந்துவிட்டது. வேண்டுமென்றே வேண்டுமானால் இன்னும் ஓரிரு போட்டிகளில் தோனி ஆட வைக்கப்படலாமே தவிர அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் அணியிலும் தோனியின் இடத்தை நிரந்தரமாக பிடித்துவிடுவார் ரிஷப் பண்ட். இந்நிலையில், ரிஷப் பண்ட் - தோனி குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்துவருகின்றனர். தோனியுடன் ஒப்பீடு செய்தும் கருத்துகள் பரவுகின்றன. தோனியின் இடத்தை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்வது குறித்த விவாதங்கள் நடந்துவருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ரிஷப் பண்ட், நான் இங்கு யாருடனும் போட்டி போட்டு ஜெயிப்பதற்காக வரவில்லை. இது நான் கற்றுக்கொள்வதற்கான காலமாகத்தான் கருதுகிறேன். தோனியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.