வெளியானது சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை; இந்தியாவின் சமீர், சாய் முன்னேற்றம்…

 
Published : Sep 16, 2017, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
வெளியானது சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை; இந்தியாவின் சமீர், சாய் முன்னேற்றம்…

சுருக்கம்

Released international badminton ranking India Sameer and Sai Progress ...

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் ஓர் இடம் முன்னேறி இந்தியாவின் சமீர் வர்மா 16-வது இடத்தையும் மற்றும் சாய் பிரணீத் 25-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சமீர் வர்மா 16-வது இடத்தையும், சாய் பிரணீத் 25-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கொரிய ஓபனில் இருந்து விலகிய மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராம் ஓர் இடம் சறுக்கி 17-வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் 8-வது இடத்தில் நிலைக்கிறார். எச்.எஸ்.பிரணாய் தொடர்ந்து 18-வது இடத்தில் இருக்கிறார்.

மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து 4-வது இடத்திலும், சாய்னா நெவால் 12-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை ஓர் இடத்தை இழந்து 25-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா - சிக்கி ரெட்டி இனை தொடர்ந்து 20-வது நீடிக்கின்றனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஆஷஸ் 2025: தொடர் வெற்றிக்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட்டின் கிண்டலுக்கு டிராவிஸ் ஹெட் பதிலடி
Shubman Gill: டி20-ல் படுமோசம்.. அதனால்தான் நீக்கினோம்.. அகர்கர் அறிவிப்பு