
உலக லெவன் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது பாகிஸ்தான்.
உலக லெவன் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் பாகிஸ்தானின் லாகூரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உலக லெவன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான் - அஹமது ஷெஸாத் இணை முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 61 ஓட்டங்கள் சேர்த்தது.
ஜமான் 25 பந்துகளில் 27 ஓட்டங்கள் சேர்த்து அவுட்டானார். பின்னர் பாபர் ஆஸம் களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய அஹமது ஷெஸாத் 37 பந்துகளில் அரை சதம் எடுத்து அசத்தினார்.
பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 163 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, அஹமது ஷெஸாத் 55 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் சேர்த்து அவுட்டானார்.
பிறகு பாபர் ஆஸம் 31 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாக, பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் குவித்தது.
உலக லெவன் அணி தரப்பில் திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய உலக லெவன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துத் தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர், திசாரா பெரேரா ஆகியோர் தலா 32 ஓட்டங்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அஹமது ஷெஸாத் ஆட்டநாயகனாகவும், பாபர் ஆஸம் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.