புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ்க்கு மரண அடி கொடுத்தது பாட்னா பைரட்ஸ்….

 
Published : Sep 16, 2017, 11:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ்க்கு மரண அடி கொடுத்தது பாட்னா பைரட்ஸ்….

சுருக்கம்

Pro Kabaddi Patna Pirates gave death to Telugu Titans.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 78-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-30 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 78-வது லீக் ஆட்டம் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் தெலுங்கு டைட்டன்ஸை ஆல் அவுட்டாக்கியது பாட்னா. அந்த அணி 10-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பிறகு நிலேஷ் சலுங்கே, கேப்டன் ராகுல் செளத்ரி ஆகியோரின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணி, 11-ஆவது நிமிடத்தில் பாட்னாவை ஆல் அவுட்டாக்கியது. இதனால் 12-11 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது.

பிறகு 13-வது நிமிடத்தில் ஸ்கோரை 14-14 என்று சமன் செய்த பாட்னா, கேப்டன் பிரதீப் நர்வாலின் அபார ஆட்டத்தால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 23-16 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் பிரதீப் நர்வாலும், மானு கோயத்தும் தங்களின் அசத்தலான ரைடுகளின் மூலம் புள்ளிகளைக் கைப்பற்ற, 46-30 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக் கண்டது பாட்னா அணி.

இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் 6-வது வெற்றியைப் பெற்றுள்ளது பாட்னா.

அதேநேரத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு இது 11-வது தோல்வியாகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சுப்மன் கில் ஆடியே ஆகணும்.. அடம்பிடித்த கம்பீர், அகர்கர்.. தேர்வுக்குழுவில் எதிர்த்த 'அந்த' 2 பேர் யார்?
ஆஷஸ் 2025: தொடர் வெற்றிக்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட்டின் கிண்டலுக்கு டிராவிஸ் ஹெட் பதிலடி