
குத்துச்சண்டையில் இருந்து மேரி கோம் ஓய்வு பெறுகிறார் என்று பரவியது வதந்தி என்று அவர் விளக்கமளித்தார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல்முறையாக பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.
ஐந்து முறை உலக சாம்பியனான மேரிகோம் ஏற்கனவே ஒலிம்பிக், ஆசிய விளையாட்டிலும் பதக்கம் வென்றுள்ளார். 35 வயதான அவர் இத்துடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகின.
இதனை மேரிகோம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதன்படி, மேரிகோம் நேற்று அளித்த பேட்டியில், "ஓய்வு குறித்து நான் ஒரு போதும் பேசவில்லை. இது வதந்தி. இந்த தகவலை கேள்விப்பட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு. என்னை பொறுத்தவரை வயது ஒரு பிரச்சனையே கிடையாது.
எனது உடல் எவ்வளவு காலம் ஒத்துழைக்கும் என்பதை அறிவேன். வெற்றி, தோல்விக்கு யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால், நான் பயிற்சியில் இருக்கும்போது, என்னை யாராலும் எளிதில் வீழ்த்திவிட முடியாது" என்று அவர் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.