
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதன்மூலம் அந்த அணி தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சாம்பியன்ஸ் லீகில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் காலிறுதியில் ரியல் மாட்ரிட் அணியும், பேயர்ன் மூனிச் அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 53-ஆவது நிமிடத்தில் பேயர்ன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் ராபர்ட் லிவான்டோவ்ஸ்கி கோலடிக்க, 76-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இதனையடுத்து 78-ஆவது நிமிடத்தில் மாட்ரிட் வீரர் செர்ஜி ரேமோஸ் 'ஓன்' கோலடிக்க, ஆட்டநேர முடிவில் பேயர்ன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஆனால், முதல் பகுதி காலிறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மூனிச் அணியை வென்றிருந்ததால் கோல் விகிதாசார அடிப்படையில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
பின்னர், அரையிறுதிக்கு முன்னேறும் அணியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் கொடுகப்பட்டது.
இந்த ஆட்டத்தின்போது பேயர்ன் வீரர் விடாலுக்கு 84-ஆவது நிமிடத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டதால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ, 104 மற்றும் 110-ஆவது நிமிடங்களில் கோலடித்தார்.
இந்த இரண்டு கோல்கள் மூலம் ஹாட்ரிக் கோலைப் பதிவு செய்த ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீகில் 100 கோல்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.
ரொனால்டோவைத் தொடர்ந்து 112-ஆவது நிமிடத்தில் மார்கோ அசென்ஸியோ கோலடிக்க, ரியல் மாட்ரிட் அணி அணி 6-3 என்ற கோல் கணக்கில் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.