
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே, ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா இருவரும் மூன்றாவது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறி உள்ளனர்.
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே தனது இரண்டாவது சுற்றில் லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லருடன் மோதினார்.
இந்தப் போட்டியில் முர்ரே 7-5, 7-5 என்ற நேர் செட்களில் ஜில்ஸ் முல்லரைத் தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தனது இரண்டாவது சுற்றில் செக்.குடியரசின் ஜிரி வெஸ்லேவுடன் மோதினார்.
இதில், 6-2, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் ஜிரி வெஸ்லேவைத் தோற்கடித்தார் வாவ்ரிங்கா. இதன்மூலம் மான்டி கார்லோ போட்டியில் 20-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கும் வாவ்ரிங்கா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உருகுவேயின் பாப்லோ கியூவாஸுடன் மோதுகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.