
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபும், மும்பை இண்டியன்ஸும் இன்று எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது.
மும்பை அணி இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றியையும், ஒரு தோல்வியையும் பெற்ற நிலையில் இன்று பஞ்சாபை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தினால் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெறும்.
அதேசமயத்தில் பஞ்சாப் அணி இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியிருந்தாலும் 2 வெற்றியும், மூன்று ஆட்டங்களில் தோல்வியும் கண்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் வென்று புள்ளிகள் பட்டியலில் மாற்றம் கொண்டுவருமா? என்று பார்ப்போம்.
மும்பை அணி:
கேப்டன் ரோஹித் சர்மா, போலார்ட், நிதிஷ் ராணா, ஜோஸ் பட்லர், ஹார்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, மெக்லீனாகான், ஹர்பஜன் சிங், லசித் மலிங்கா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
பஞ்சாப் அணி:
கேப்டன் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், ஹஷிம் ஆம்லா, மனன் வோரா, இயோன் மோர்கன் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இன்று இரவு 8 மணிக்கு சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு ஆகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.