
சென்னையில் ஏப்ரல் 26-ஆம் தேதி 19-ஆவது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்க இருக்கிறது. இது ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும்.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் முக்கிய வீரர்கள் பங்கேற்க உள்ள இந்தப் போட்டியில், பாகிஸ்தானைச் சேர்ந்த 4 வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் செளரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பலிக்கல் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன், சென்னை இளம் வீரரான வேலவன் செந்தில்குமார் களம் காண்கிறார்.
ஆடவர் பிரிவில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஹாங்காங்கின் மேக்ஸ் லீ, தரவரிசை இவ்வாறாகவே தொடரும் பட்சத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய வீரர் செளரவ் கோஷலை வரும் 30-ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் சந்திப்பார்.
மலேசியாவின் மோஹத் நஃபிஸ்வான், பாகிஸ்தானின் முதல்நிலை வீரர் ஃபர்ஹான் மெஹ்பூப் ஆகியோரும் இறுதி ஆட்டத்துக்கு கடுமையாக போட்டியிடுபவர்களாக இருப்பார்கள்.
மகளிர் பிரிவில், உலகின் 14-ஆம் நிலை வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா, உலகின் 12-ஆம் நிலை வீராங்கனையான ஹாங்காங்கைச் சேர்ந்த அன்னி ஆவுடன் மோத உள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.