ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்!! எடுத்த எடுப்பிலேயே எதிரணிகளை தெறிக்கவிடும் கிறிஸ்டன்

By karthikeyan VFirst Published Aug 31, 2018, 10:29 AM IST
Highlights

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேனியல் வெட்டோரி நீக்கப்பட்டு, புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேனியல் வெட்டோரி நீக்கப்பட்டு, புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் அணி வலுவான அணியாக திகழ்ந்தும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் மூன்று முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

உலகின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் ஒருசேர பெங்களூரு அணியில் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2018 ஐபிஎல்(11வது சீசன்) தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய பெங்களூரு அணி, பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை. 14 லீக் போட்டிகளில் 6ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடித்து வெளியேறியது. 

இதுவரை அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால், அந்த அணி நிர்வாகம், பயிற்சியாளர் குழுக்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆர்சிபி அணியின் பவுலிங் ஆலோசகராக உள்ள ஆஷிஸ் நெஹ்ராவை தவிர மற்ற அனைவரையும் மாற்ற அந்த அணி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில், ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து வெட்டோரியை நீக்கிவிட்டு, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது அணி நிர்வாகம். 

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரான கிறிஸ்டன் பயிற்சியாளராக இருந்தபோதுதான் இந்திய அணி, 2011ல் உலக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. கோலி, டிவில்லியர்ஸ், மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர், குயிண்டன் டி காக் போன்ற சிறந்த வீரர்களை கொண்டிருந்தபோதிலும் அந்த அணி போனமுறை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. அதன் எதிரொலியாக அந்த அணிக்கு 4 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக இருந்த  வெட்டோரி நீக்கப்பட்டு கிறிஸ்டன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிறிஸ்டன், ஆர்சிபி அணிக்கு பேட்டிங் பயிற்சியளிக்கும் பணியை ரசித்து செய்தேன். தொடர்ந்து பெங்களூரு அணியுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய சிறந்த பணியை அணிக்காக வழங்குவேன். அணியின் தலைமை பயிற்சியாளராக என்னை உயர்த்திய அணி நிர்வாகத்துக்கு நன்றி. இனிவரும் காலம் அணிக்கு வெற்றிகரமாக அமையும் என கிறிஸ்டன் நம்பிக்கை தெரிவித்தார். 
 

click me!