ரவி சாஸ்திரி இருக்கும் இடத்தில் எப்போதுமே நேர்மறையான சிந்தனைகள் இருக்கும் - இந்திய துணை கேப்டன் பாராட்டு...

 
Published : Dec 29, 2017, 10:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
ரவி சாஸ்திரி இருக்கும் இடத்தில் எப்போதுமே நேர்மறையான சிந்தனைகள் இருக்கும் -  இந்திய துணை கேப்டன் பாராட்டு...

சுருக்கம்

Ravi Shastri always has positive thoughts - Indian Vice Captain congratulates ...

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருக்கும் இடத்தில் எப்போதுமே நேர்மறையான சிந்தனைகள் இருக்கும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறினார்.

இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே  நேற்று செய்தியாளர்களிடம் பேசியது:

"அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்தியாவில் பந்துவீசுவதைப் போல, அந்நிய மண்ணிலும் சிறப்பாக பந்துவீச இயலும். மொயீன் அலி, நாதன் லயன் ஆகியோர் இங்கிலாந்தில் ஒரு முறையிலும், ஆஸ்திரேலியாவில் வேறு முறையிலும் பந்துவீசுவதை பார்க்க முடியும்.

அதேபோல், அஸ்வின் மற்றும் ஜடேஜா தென் ஆப்பிரிக்காவில் தங்களது பந்துவீச்சு முறையை மாற்றும் பட்சத்தில் அங்கு சிறப்பாக செயல்பட இயலும். அதற்கு அவர்கள் தங்களின் பந்துவீச்சு திறன், பந்துவீச்சு முறை, அதன் வேகம் ஆகியவற்றில் சிறிதளவு மாற்றம் செய்ய வேண்டும்.

இருப்பினும், அவர்கள் இருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ பிளேயிங் லெவனில் களம் காணும் பட்சத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருக்கும் இடத்தில் எப்போதுமே நேர்மறையான சிந்தனைகள் இருக்கும். ஆட்டத்தை ரசித்து விளையாடுமாறு அவர் கூறுவார். ஒரு வீரர் சிறப்பாக செயல்படாவிட்டால், ரவி சாஸ்திரி அவருக்கு ஆதரவாக இருந்து, அவரிடம் நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி அவரை மேம்படுத்துவார்.

அதேபோல் கேப்டன் விராட் கோலியும் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளிப்பவர். 'உனது விருப்பப்படி விளையாடு. உனக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். முடிவுகள் குறித்து கவலைப்படாதே' என்றே எப்போதும் கூறுவார்" என்று அவர் பேசினார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா