பிரீமியர் பாட்மிண்டன் லீக்: டெல்லியை சுக்கு நூறாக்கியது பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி...

 
Published : Dec 29, 2017, 10:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
பிரீமியர் பாட்மிண்டன் லீக்: டெல்லியை சுக்கு நூறாக்கியது பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி...

சுருக்கம்

Premier Badminton League Bangalore defeat delhi

பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 5-2 என்ற கணக்கில் டெல்லியை வீழ்த்தியது அசத்தியுள்ளது.

பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் பிரதான ஆட்டங்களில் ஒன்றான மகளிர் ஒற்றையர் பிரிவில் டெல்லியின் சங் ஜி ஹியூன் 15-10, 8-15, 15-5 என்ற செட் கணக்கில் கிறிஸ்டி கில்மோரை வென்றார்.

இதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவு பிரதான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் விக்டர் அக்ஸல்சென் 15-11, 15-11 என்ற செட் கணக்கில் டெல்லியின் டியான் ஹெளவேயை வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்சின் சோங் வெய் ஃபெங் 10-15, 15-13, 15-8 என்ற செட் கணக்கில் டெல்லி டேஷர்ஸின் வோங் விங் கி வின்சென்டை வென்றார்.

இதேபோல ஆடவர் இரட்டையர் பிரிவில் பெங்களூர் இணையான மதியாஸ் போ - கிம் சா ராங்  15-9, 15-12 என்ற செட் கணக்கில் டெல்லி இணையான இவான் சோஸானோவ் - விளாதிமீர் இவானோவை வென்றது.

அதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியின் கிம் சா ராங் - சிக்கி ரெட்டி இணை 15-10, 12-15, 15-11 என்ற செட் கணக்கில் டெல்லி டேஷர்ஸ் அணியின் விளாதிமீர் இவானோவ் - அஸ்வினி பொன்னப்பா இணையை வென்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா