
கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலும் பாலிவுட் நடிகை நிதி அகர்வாலும் மும்பையில் ஒன்றாக ஒரு ஹோட்டலுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், இந்த ஐபிஎல்லில் தனது திறமையை நிரூபித்து அனைத்து வித போட்டிகளுக்குமான இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டார். இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடிய ராகுல், 14 போட்டிகளில் ஆடி 659 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெறவில்லை. இந்த சீசன் பஞ்சாப் அணிக்கு சரியாக அமையவில்லை என்றாலும் ராகுலுக்கு சிறப்பாகவே அமைந்தது.
இதுவரை டெஸ்ட் வீரராக மட்டுமே பார்க்கப்பட்ட ராகுல், ஐபிஎல்லில் அதிரடியாக ஆடி தன்னால் அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆட முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். இதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவிதமான இந்திய அணிகளிலும் இடத்தை பிடித்துவிட்டார் ராகுல்.
இந்நிலையில், ராகுலும் பாலிவுட் நடிகை நிதி அகர்வாலும் மும்பையில் ஒரு ஹோட்டலுக்கு சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இருவரும் காதலிக்கின்றனரா? அல்லது நட்பாக வெளியில் சென்றனரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஏற்கனவே விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து மணமுடித்தார். அதேபோல, அடுத்த கிரிக்கெட் வீரர் - பாலிவுட் நடிகை ஜோடியாக ராகுலும் நிதி அகர்வாலும் இருப்பார்களோ? என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.