
இந்திய ரக்பி மகளிரணி முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண உள்ளது.
சர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் 'ஆசியா டிவிஷன் 1' புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில், இணைந்துள்ள இந்திய மகளிரணி முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண உள்ளது.
ரக்பி விளையாட்டில் இந்திய மகளிரணி ஏற்கெனவே '7 வீராங்கனைகள்' முறையில் கலந்துகொண்டது. இந்த நிலையில், தற்போது ரக்பி விளையாட்டின் பாரம்பரியமான '15 வீராங்கனைகள்' முறையில் கலந்து கொள்கிறது.
இந்த ஆசிய டிவிஷனில் இந்தியாவுடன், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர் அணிகளும் பங்கேற்கின்றன. 15 வீராங்கனைகளுடன் விளையாடும் சர்வதேச ரக்பி போட்டியில் இந்த அணிகளுமே முதல் முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று நாடுகள் பங்கேற்கும் போட்டிகள் வரும் ஜூன் 2 முதல் 8 வரையில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக இந்திய ரக்பி பயிற்சியாளர் நாசர் ஹுசைன் தெரிவித்தார். இந்த மூன்று நாடுகளையும் சேர்த்து ஆசியாவில் பாரம்பரிய ரக்பி போட்டியை விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அணிக்கு மகாராஷ்டிரத்தின் வாபிஸ் பாருசா கேப்டனாக உள்ளார். அணியில் ஒடிஸாவிலிருந்து 9 வீராங்கனைகள், டெல்லியிலிருந்து 7 வீராங்கனைகள், மேற்கு வங்கத்திலிருந்து 5 வீராங்கனைகள், மகாராஷ்டிரத்திலிருந்து 3 வீராங்கனைகள், கோவா, பிகாரிலிருந்து தலா ஒரு வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.