rahul dravid news:இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று: ஆசியக் கோப்பைக்கு சந்தேகம்?

By Pothy RajFirst Published Aug 23, 2022, 12:03 PM IST
Highlights

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன என்று பிடிஐ செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன என்று பிடிஐ செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆசியக் கோப்பை டி20 தொடருக்காக துபாய் செல்லும் இந்திய அணியுடன் டிராவிட் செல்வது சந்தேகம் எனத் தெரிகிறது. ஆசியக் கோப்பை வரும் 27ம் தேதி தொடங்குகிறது. வரும் 28ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டி20 போட்டி நடக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக பக்கா பிளானுடன் சிறப்பாக செயல்படும் ரோஹித் - டிராவிட் கூட்டணி

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். விரைவில் குணமடைந்துவிடுவார் என நம்புகிறோம், குணமடைந்தால் அணியிலும் இணைந்துவிடுவார். 

தற்போது ஜிம்பாப்பேயில் இருக்கும் விவிஎஸ் லட்சுமண் துபாய்க்கு செல்வாரா என்பது குறித்து பேசப்படும். தேவைப்படும்பட்சத்தில் லட்சுமண் இந்திய அணிக்கு அழைக்கப்படுவார். அதுவரை மாம்பரே பயிற்சியாளராக இருப்பார். அணியில் மற்ற வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் உள்ளனர், நாளை அதிகாலை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்திய அணியினர் புறப்படுவார்கள் ” எனத் தெரிவித்தார்.

நீங்க தொலைஞ்சிங்கடா.. ஆசிய கோப்பைக்கு முன் பாகிஸ்தானை எச்சரிக்கும் இன்சமாம் உல் ஹக்

இதனால் தற்காலிகமாக இந்திய அணிக்கு துணைப் பயிற்சியாளர் பிரவீண் மாம்பரே பயிற்சியாளராக இருப்பாரா அல்லது ஆசியக் கோப்பைக்காக என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண் இணைவாரா என்பது தெரியவில்லை.

கேஎல் ராகுல், தீபக் ஹூடா உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் மும்பையிலிருந்து இன்று ஐக்கி அரபு அமீரகம் புறப்பட்டுவிட்டனர். ஹராரேயிலிருந்து நேரடியாக துபாய்க்கு அக்ஸர் படேல் வந்துவிடுவார் எனத் தெரிகிறது.

click me!