
குரோஷியாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை ரஹி சர்னோபாத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இறுதிச்சுற்றில் சர்னோபாத் 39 புள்ளிகள் பெற்றார். ஃப்ரான்ஸ் வீராங்கனை மதில்தே லமோலே, 31 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர், 7வது இடத்திற்கு பின்தங்கி ஏமாற்றமளித்தார்.
முந்தைய போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த நிலையில், ரஹி சர்னோபாத்தின் மூலம் முதல் தங்கம் கிடைத்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.