ஏற்கனவே அனுபவிச்சதே போதும்.. உன்னால மறுபடியும் நாங்க அனுபவிக்க முடியாது!! ஸ்மித்தை தூக்கி போட்ட ராஜஸ்தான்.. ரஹானே கேப்டன்

Asianet News Tamil  
Published : Mar 26, 2018, 03:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
ஏற்கனவே அனுபவிச்சதே போதும்.. உன்னால மறுபடியும் நாங்க அனுபவிக்க முடியாது!! ஸ்மித்தை தூக்கி போட்ட  ராஜஸ்தான்.. ரஹானே கேப்டன்

சுருக்கம்

rahane appointed as captain for rajasthan royals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித் நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது. ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித் கேப்டனாக இருந்தார். தற்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில், ஆஸ்திரேலிய கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் விலகியுள்ளார். அவருக்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால் ஒழுங்கீன நடவடிக்கையில் சிக்கி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை இழந்த ஸ்மித்தை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சூதாட்ட புகாரில் சிக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் அணி, இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தமுறை தான் களம் காண்கிறது. அப்படி இருக்கையில், ஸ்மித்தால் மீண்டும் பிரச்னை வேண்டாம் என கருதி ஸ்மித்தை நீக்கிவிட்டு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!