
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆனால், ஜோகோவிச் தனது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற செட்களில் கேல் மான்ஃபில்ஸை வீழ்த்தினார் நடால்.
ஆனால், போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3-6, 6-2, 3-6 என்ற செட்களில் பிரிட்டனின் கைல் எட்மன்டிடம் தோல்வி கண்டார்.
மற்றொரு வீரரான போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் 7-5, 6-3 என்ற செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹசியை வீழ்த்தினார்.
அதேபோன்று, போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் 5-7, 7-(7/3), 6-2 என்ற செட்களில் கஜகஸ்தானின் மிகைல் குகுஷ்கினை வீழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.