ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: இரண்டாவது சுற்றில் கால் பதித்த இந்திய வீரர்கள் இவர்கள்தான்...

Asianet News Tamil  
Published : May 10, 2018, 11:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: இரண்டாவது சுற்றில் கால் பதித்த இந்திய வீரர்கள் இவர்கள்தான்...

சுருக்கம்

Australian Open Badminton Indian players in the second round

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் 2-வது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் மற்றும் இஸ்ரேலின் மிஷா ஜிஸ்பர்மேன் மோதினர். 

இதில், 21-17, 21-14 என்ற நேர் செட்களில் மிஷா ஜிஸ்பர்மேனை வீழ்த்தினார் சாய் பிரணீத். 2-வது சுற்றில் சாய் பிரணீத் - இந்தோனேஷியாவின் பான்ஜி அகமது மெளலானாவை எதிர்கொள்கிறார்

மற்றொரு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் சமீர் வர்மா 13-21, 21-17, 21-12 என்ற செட்களில் நியூஸிலாந்தின் அபினவ் மனோடாவை வீழ்த்தினார். 2-வது சுற்றில் சமீர் வர்மா  - ஜப்பானின் டகுமா யுடாவையும் சந்திக்கின்றார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜக்கா வைஷ்ணவி ரெட்டி 19-21, 21-15, 21-15 என்ற செட்களில் இங்கிலாந்தின் ஜியார்ஜினா பிளான்டை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை தனது முதல் சுற்றில் 21-11, 21-10 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் லுகாஸ் டெஃபோல்கி/மிக்கெல் ஃபாரிமான் இணையை வீழ்த்தியது. 

மற்றொரு இந்திய ஜோடியான அர்ஜூன் - ராமச்சந்திரன் 21-7, 21-15 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ரேமன்ட் டாம் - எரிக் வோங் ஜோடியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மேகனா ஜகம்புடி -  பூர்விஷா ராம் இணை முதல் சுற்றில் 21-10, 21-16 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் மேகி சான் - ஜோடீ வேகா இணையை வென்றது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!