போஸ்னியா வீரரை வீழ்த்தி ரஃபேல் நடால் அடுத்த சுற்றுக்கு அசத்தல் முன்னேற்றம்...

Asianet News Tamil  
Published : May 17, 2018, 10:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
போஸ்னியா வீரரை வீழ்த்தி ரஃபேல் நடால் அடுத்த சுற்றுக்கு அசத்தல் முன்னேற்றம்...

சுருக்கம்

Rafael Nadal advanced to the next round

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் போஸ்னியா வீரரை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினார்.

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி இத்தாலியில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் மற்றும் போஸ்னியா வீரர் டாமிஸ் ஜும்ஹூர் மோதினர். இதில், 6-1, 6-0 என்ற செட்களில் டாமிஸ் ஜும்ஹூரை எளிதாக வீழ்த்தினார் நடால்.

அதேபோன்று மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-2 என்ற செட்களில் ஜியார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை தோற்கடித்தார்.

பிற ஆட்டங்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 6-4, 1-6, 6-3 என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை தோற்கடித்தார். 

அதேபோன்று ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸ் 6-7(5/7), 7-6(7/2), 7-6(7/5) என்ற செட்களில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரையும் தோற்கடித்தார். 

ஜெர்மனியின் ஃபிலிப் கோல்ஷ்ரைபர் 6-4, 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை வீழ்த்தி அசத்தினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்